குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்: நிகழ்த்திய சாதனை!

Report Print Trinity in பெண்கள்
296Shares
296Shares
ibctamil.com

குழந்தை திருமணத்திலிருந்து காக்கப்பட்ட பெண் இடைநிலை பயிற்சிகளில் (intermediate ) 86 சதவிகித மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்திருக்கிறார்.

வி.சந்தியா எனும் பெண்ணை ஹைதராபாத்தில் உள்ள என்.ஜி.ஓ. பாலலா ஹகுலா சங்கத்தினர், அவளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்திலிருந்து காப்பாற்றினர்.

பின்னர், அது குறித்து பேசிய சங்கத்தினர் அப்படி அவளை காப்பாற்றும் போது சந்தியாவிற்கு 15 அல்லது 16 வயதிருக்கும் எனவும், அவள் தனது SSC-யின் இறுதித் தேர்வைக் கூட எழுத அனுமதிக்கப்படாத நிலையில் இருந்திருக்கிறாள் எனவும் கூறினர்.

மேலும், இதைக் கவனித்த தாங்கள் அதற்குப் பின் அந்தத் திருமணத்திலிருந்து அவளைக் காப்பாற்றி அவள் படிப்பைத் தொடர உதவி செய்தோம் என கூறினர்.

பின்னர், ஏகப்பட்ட சண்டை குழப்பங்களுக்கிடையில் SSC யில் அவள் எழுதிய ஒரே ஒரு பரீட்சை அவளது கல்வித் தரத்தை நிரூபிக்க போதுமானதாக இருந்தது.

அதன் பின் மேலும் படிப்பைத் தொடர மாநில அரசின் உதவி கிடைக்காத சமயத்தில், வனஸ்தலிபுரத்தில் உள்ள என்.ஆர்.ஐ. இளைய கல்லூரி நிர்வாகம் இவளது படிப்புத் தொகையை ஏற்றுக் கொண்டது. இரண்டு வருடங்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்ற போதிலும் சந்தியாவின் புத்தகம் மற்றும் இதர செலவுகளுக்காக நன்கொடை வாங்கி அதற்கு உதவி செய்துள்ளதாக கூறுகின்றனர் பாலலா ஹகுலா சங்கத்தினர்.

திருமணம் நின்றதால் சந்தியாவின் தந்தை தற்கொலை செய்துவிட தந்தையின் மரணத்திற்கும் சந்தியாதான் காரணம் என்கிற குற்றத்தை உறவினர் இந்த சிறுமியின் மேல் செலுத்தியுள்ளனர்.

இருந்த போதிலும் பல மன உளைச்சல்களுக்கு மத்தியில் படித்து தனது முதல் இடை நிலைத் தேர்வில் 93 சதவிகிதம் பெற்ற சந்தியா இப்போது இரண்டாவது இடை நிலைத் தேர்வில் 86 சதவிகிதம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது பற்றி சந்தியா பேசிய போது, தான் 90 சதவிகிதத்தை எதிர்பார்த்திருந்தேன். 86 சதவிகிதம் தான் கிடைத்ததால் சற்று ஏமாற்றம் அடைந்ததாக கூறினார்.

இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய சந்தியாவை அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். அவளது ஆசைகளுக்கு துணை நிற்கின்றனர்.

இருப்பினும் துணிகள் தேய்த்துத் தரும் அம்மா மற்றும் சிறிய நிறுவனத்தில் வேலை செய்யும் தங்கை என பண ரீதியாக பின் தங்கியிருப்பதாக சந்தியா குறிப்பிடுகிறார். கல்லூரிக்கட்டணம் செலுத்துவதும் சிரமமாக இருப்பதாக கூறுகிறார்.

மேற்கொண்டு கல்வியில் தன் கனவுகளைத் தொடர்வதற்கு மாநில அரசின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார் சந்தியா.

குழந்தை திருமணத்தின் போது மணமகளை காப்பாற்றுவது மட்டும் மாநில அரசின் கடமை அல்ல எனும் என் ஜி ஓ வை சேர்ந்த அச்சியுதா, ஒரு திருமணத்திற்கு முன் அவர் படித்தவர் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், கல்வி மட்டுமே ஒரு பெண்ணை சுயமாக அவளது சொந்தக் காலில் நிற்க வைக்கிற கருவி என்றும் கூறினார்.

எவ்வளவோ தடைகள், அவமானங்கள், வலிகள், வறுமை , மனரீதியான வேதனைகளை தாண்டி தனக்குப் பிடித்த கல்வியில் உயர்ந்த மதிப்பெண் பெற்று சந்தியா இன்று அனைவர் மனத்திலும் உயர்ந்து நிற்கிறாள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்