தோளில் குடும்ப சுமை...தலையில் மூட்டை சுமை: கண்கலங்க வைக்கும் லட்சுமி

Report Print Deepthi Deepthi in பெண்கள்
380Shares

வேலை பார்க்கும் இடங்களில் என்னதான் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை கண்டுகொள்ளாமல் தனது பணியில் கவனமாக இருந்து சாதிக்கும் பெண்கள் ஏராளம்.

எல்லா துறைகளிலும் பெண்கள் கால் பதித்து விட்டார்கள், அது எந்த வேலையாக இருந்தாலும் சரி, ஆண்கள் மட்டும் தான் அதனை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை, நாங்களும் செய்யலாம் என களமிறங்கியுள்ளனர்.

அவர்களுக்கெல்லாம் உதாரணம் தான் இந்த லட்சுமி, கல்லூரிக்கு சென்று வணிகவியல் பட்டப்படிப்பை படித்திருந்தாலும் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறாள்.

அதுவும் ரயில் நிலையத்தில் பயணிகளின் மூட்டைகளை சுமக்கும் பணி. பொதுவாக ரயில் நிலையத்தில் ஆண்கள் தான் காத்துக்கிடந்து பயணிகளின் மூட்டைகளை சுமந்து பணம் சம்பாதிப்பார்கள், இவர்களுக்குள்ளேயே அதிக போட்டிகள் நிலவும்.

அப்படியிருக்கையில் ஒரு பெண்ணுக்கு மட்டும் அந்த இடத்தில் அனுமதி கிடைப்பது என்பது மிகசிரமமான ஒன்று.

ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தலையிலும், கையிலும் பயணிகளின் மூட்டைகளை சுமந்துகொண்டு பயணிக்கிறாள் லட்சுமி.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த Jabalpur மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நீங்கள் லட்சுமியை பார்க்கலாம், தனது தந்தையின் மரணத்திற்கு பின்னர் குடும்ப பொறுப்பு இவளது தோளில் விழுந்தது.

தனது குடும்ப பாரத்தோடு சேர்த்து பயணிகளின் மூட்டைகளையும் தோளில் சுமக்கும் இந்த லட்சுமி, மூட்டைகள் சுமக்கும் முதல் பெண் தொழிலாளி ஆவார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்