அன்று அனாதையாக பசியால் துடித்த தமிழ்பெண்....இன்று ரயில்வே அதிகாரியாக எழுந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

கேரள மாநிலத்தில் அனாதையாக விடப்பட்ட தமிழ்பெண் இன்று ரயில் நிலைய அதிகாரியாகியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1998 ஆம் ஆண்டு திருச்சூர் ரயில் நிலையத்தின் 3வது பிளாட்பாரத்தில் கீதா என்ற 3 வயது சிறுமி, அனாதையாக விடப்பட்ட நிலையில், பசியால் மயங்கி கிடந்துள்ளார்.

அப்போது, அவ்வழியாக வந்த கன்னியாஸ்திரிகள் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து, விசாரித்துள்ளனர், ஆனால் கீதாவால் சரியாக பேசமுடியவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த நபர், நான் கீதாவின் தந்தை, தமிழகத்தில் இருந்து திருச்சூருக்கு வேலை தேடி வந்தேன். இங்கு தங்குவதற்கு இடம் இல்லாததால் மகளை ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டேன் என்று கூறியுள்ளார்.

நிலையை அறிந்துகொண்ட கன்னியாஸ்திரிகள், தங்குவதற்கு இடம் கிடைக்கும்வரை கீதா எங்கள் பராமரிப்பில் இருக்கட்டும் என்று அழைத்து சென்றனர். அடுத்து நாள் தந்தை மடத்திற்கு வந்து மகளை பார்த்தார். அதன்பின்னர் இன்று வரை அவர் வரவில்லை.

அதன்பின்னர், கீதாவை கன்னியாஸ்திரிகள் பொறுப்பெடுத்துக்கொண்டனர். படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய கீதாவை, கன்னியாஸ்திரிகள் நன்றாக படிக்கவைத்தனர்.

கேரள மற்றும் இந்தியாவுக்காக கூடை பந்து விளையாட்டில் பதக்கங்கள் வாங்கியுள்ளார்..

கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியில் வரலாற்றை முதன்மை பாடமாக தேர்வு செய்த கீதா அதில் முதல்வகுப்பில் தேர்வானார். மலையாளம், ஆங்கிலம் என்று இருமொழிகளையும் நன்கு கற்றார்.

விளையாட்டு மற்றும் பட்டப்படிப்பு தகுதியுடன் ரெயில்வே தேர்வு எழுதிய கீதா, தேர்வில் வெற்றி பெற்று கவுகாத்தியில் அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார்.

கீதாவுக்கு தற்போது வயது 22 வயது. நேற்று தான் அனாதையாக விடப்பட்ட அதே 3-வது பிளாட்பாரத்திற்கு ரெயில்வே அதிகாரியாக கம்பீரமாக நடந்து வந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கீதா, எனது பெற்றோரின் முகம் இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது, விரைவில் அவர்களை கண்டுபிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வரும் 22-ந்தேதி திருவண்ணாமலையை சேர்ந்த கூடைப்பந்து வீரர் ஜெயகுமார் என்பவரை திருமணம் செய்ய ஊருக்கு செல்கிறேன். என்னை வாழ வைத்து கேரள மண்ணுக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்