மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரை: இவர்கள் மட்டும் சாப்பிடக் கூடாது?

Report Print Printha in பெண்கள்
404Shares

குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகைகள் வரும் நாட்களில் மாதவிடாயைத் தள்ளிப் போடும் மாத்திரைகளை சிலர் சாப்பிடுவார்கள்.

ஆனால் அந்த மாத்திரையின் பின்விளைவுகள் பற்றி யாரும் அறிந்துக் கொள்வதில்லை.

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
  • தோல் அரிப்பு, அலர்ஜி, நுரையீரல் நோய், மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.
  • 20 வயதிற்குள் இருக்கும் இளம்பெண்கள், மாதவிடாயைத் தள்ளிப் போடும் மாத்திரைகளைத் தவிர்ப்பது நல்லது.
  • அதுவே 20 வயதிற்கு மேலான பெண்கள், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே இந்த மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • மைக்ரேன் தலைவலி இருப்பவர்கள், சீரான மாதவிடாய் இல்லாதவர்கள் இந்த மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.
எத்தனை முறை பயன்படுத்தலாம்?

மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரைகளை வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாய் வருவதற்கும் மூன்று நாட்களுக்கு முன், இந்த மாத்திரைகளை தொடர்ந்து 5 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்?

மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை எடுக்கும் போது ஆரம்பகாலத்தில் வாந்தி வருவது போன்ற உணர்வு, மூச்சுத்திணறல், தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சிலருக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு, உறைகட்டி, மார்பக வீக்கம் போன்ற தீவிரமான பின்விளைவுகளும் ஏற்படலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்