41 வயதிலும் தேவதையாய் ஜொலிக்கும் அழகியின் சீக்ரெட்ஸ்

Report Print Printha in பெண்கள்

முன்னாள் பிரபஞ்ச அழகியான பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது 41 வயதிலும் இளமைத் தோற்றத்தில் ஜொலிக்கிறார்.

தனது உடல் எடையை பராமரிப்பில் கவனமாக இருக்கும் சுஷ்மிதா, சமீபத்தில் ஆப்ஸ் வொர்க் அவுட்(Abs Work Out) செய்த போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பதிவிட்ட அடுத்த சில மணிநேரத்தில் அது வைரலாகி விட்டது.

அந்த புகைப்படத்தை பற்றி இன்ஸ்டாகிராமில், பயணங்களுக்கு நடுவே மீண்டும் வொர்க் அவுட்டை தொடங்கி விட்டேன்.

எனது 42-ஆவது பிறந்த நாளில் இந்த பயிற்சியை ஆரம்பித்திருக்கிறேன். இத்தனை விரைவாக உடல் இளைக்க முடியாது என்று சிலர் கூறலாம்.

ஆனால் நான் தொடர்ந்து வொர்க் அவுட் செய்து என் பிறந்த நாளுக்கு உடலை கட்சிதமாக வைத்திருப்பேன்.

என்னுடைய உடல் என் விதிமுறைகள் இதில் யார் என்ன சொல்வது? என் முகத்திலும் சரி, உடலிலும் சரி அதன் ஒவ்வொரு நுனியையும் நான் கொண்டாடுகிறேன்.

அவை முற்றிலும் எனக்குரியவை என்று பதிவு செய்துள்ளார்.

நடிகை சுஷ்மிதாவின் இந்த கருத்திற்கு 95,274 லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கில் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இவரது சீக்ரெட்ஸ்
  • தினந்தோறும் காலை எழுந்தவுடன் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது வழக்கம், இதுமட்டுமின்றி ஒருநாள் விட்டு ஒருநாள் Power Plate Exercise செய்வார்.
  • காலை உணவாக ஒரு கப் இஞ்சி டீயுடன், ஒரு கிளாஸ் காய்கறி சூப், மூன்று முட்டைகள்(மஞ்சள் கரு இல்லாதது)
  • 10 மணியளவில் ஒரு கப் காபியுடன் பாதாம்.
  • மதிய உணவாக ஒரு கப் சாதம், ஒரு கப் பருப்புடன் ஒரு கப் வேகவைத்த காய்கறிகள் அல்லது சிக்கன்/மீன், மதிய உணவுக்கு பின்னர் பழங்கள்.
  • மாலை நேரத்தில் ஒரு கப் காபியுடன் வெஜிடபிள் சாண்ட்விச்/ இட்லி/ ஒரு கப் உப்புமா
  • தினமும் இரவு படுக்கைக்கு முன்பாக மேக்கப்பை கலைத்து விடுவார்.
  • தினமும் அளவான தண்ணீர் அருந்துவது, அளவான உறக்கம்.
  • முகத்திற்கு பப்பாளி அல்லது ஆரஞ்ச் பேஸ்பேக் போடுவது, கடலை மாவு பயன்படுத்துவது

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்