பெண்களின் அழகிய தோல்களை விற்பனை செய்யும் கும்பல்

Report Print Raju Raju in பெண்கள்

பெண்களின் வறுமையை காரணம் காட்டி மருத்துவ உலகில் வாடகை தாய், கருமுட்டை தானம் போன்ற ஏராளமான சுரண்டல்கள் நடந்து வருகிறது.

தற்போது, இந்திய பெண்களின் உடல் தோல்களை வைத்து நடக்கும் தோல் திருட்டு வியாபாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

உடலில் அதிகமாக இருக்கும் பகுதி தோல் தான். இது அழகாக இருக்க வேண்டும் என பல மேல்தட்டு மக்கள் விரும்புகிறார்கள்.

இந்த தோல்கள் தற்போது வியாபார பொருளாகி விட்டது. ஆம், 100 செ.மீ சதுர அளவு கொண்ட தோல் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகிறது.

இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் சர்ஜரி ஆப்ரேஷன் மூலம் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் இதற்காகவே பத்துக்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் வேலையே தோலையும் தோலில் இருக்க வேண்டிய திசுக்களை உற்பத்தி செய்வது, அவை வளர்வதற்கான திசுக்களை கண்டுபிடித்து சந்தைபடுத்துவது தான்.

ஆரம்பத்தில் மனிதர்களின் தோலை அவர்களது உறவினர்கள் அனுமதியின்றி திருடப்படுகிறது என்று அமெரிக்காவில் செயல்படும் Food and Drug Administration (FDA) நிறுவனம் குற்றம் சுமத்தியது.

இதை சமாளிக்க, வெளிநாட்டிலிருந்து தோல்களை இறக்குமதி செய்ய நினைத்தார்கள். இதற்காக, தனியாக ஏஜண்ட்டுகளும் உள்ளார்கள். அவர்கள் மூலமாக இந்திய பெண்களின் தோல்கள் வாங்கப்பட்டு, அமெரிக்காவில் முழுமை பெறச் செய்து விற்கப்படுகிறது.

தோல்களை பெற பெரும்பாலான ஏஜண்டுகள் அணுகுவது பாலியல் தொழிலாளர்களை தான். அவர்களை மூளை சலவை செய்து இதற்கு சம்மதிக்க வைக்கிறார்கள்.

இதை எழுத்துபூர்வமாக பெண்களிடம் சம்மதத்தை கேட்டு எழுதியும் வாங்கி கொள்கிறார்கள்.

ஆனாலும், தோல்களை தானமாக தரும் பெண்களுக்கு சிறிய தொகை மட்டுமே அளிக்கப்பட்டு மொத்த லாபத்தையும் ஏஜண்டுகளே எடுத்து கொள்கிறார்கள்.

இப்படி எடுக்கப்பட்ட சாம்பில்களை பல்வேறு திசுக்களை ஆராயும் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பின்ன்ர், அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் தோலாக உருமாற்றி சந்தையில் விற்கப்படுகிறது.

இது போன்ற தோல் தானங்கள் பெண்களுக்கு தெரியாமல் போதை மருந்து, மயக்க மருந்து தரப்பட்டும் அவர்களிடமிருந்து எடுக்கப்படுகிறது.

இது எல்லாமே பரம ரகசியமாக நடப்பதால் இதை அதிகாரிகளால் ஒழிக்கவே முடியவில்லை.

தங்கள் வறுமையை ஒழிக்க தங்கள் தோலையே பீய்த்து கொடுக்க எப்போதும் தயாராக ஒரு கூட்டம் இருக்கவே செய்கிறது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments