15 வயதில் திருமணம்...22 வயதில் நீச்சல் உடையில் தோன்றி கீரிடத்தை வென்ற பெண்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்தியாவின் முதல் பெண்மணி இந்திராணி ரஹ்மான் ஆவார்.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர், இந்திய கலாசாரத்தை பின்பற்றும் படி நெற்றியில் அழகிய பொட்டோடு நீச்சல் உடையில் தோன்றினார்.

சுமார், 30 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் இந்திராணியின் அழகிய விழிகள் அனைவரையும் கவர்ந்து க்ரீடத்தை தட்டி சென்றார்.

Indiatimes.com
Indiatimes.com

அதே ஆண்டிலேயே மிஸ் இந்தியா பட்டத்தையும் வென்றார். போட்டியில் கலந்து கொண்டபோது இவருக்கு வயது 22 ஆகும். மேலும், 15 வயதில் திருமணம் செய்து கொண்ட இவருக்கு குழந்தையும் இருந்தது.

ஒரு குழந்தைக்கு தாயான பின்னரே, இவர் அழகி போட்டியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரதநாட்டியம், குச்சிபுடி, கதக்களி, ஒடிசி ஆகிய நடனங்களில் கைதேர்ந்த இவர், பல்வேறு நாடுகளில் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார்.

Indiatimes.com

1969 ஆம் ஆண்டு இந்திய அரசால் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது, சங்கீத நாடக அகாடமி விருதும், தரக்நாத் தாஸ் போன்ற விருதுகளையும் வாங்கியுள்ளார்.

1976 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் குடிபெயர்ந்த இவர், தனது பரதக்கலையை பல்வேறு நாடுகளில் அரங்கேற்றி வந்தார்.

Indiatimes.com

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments