பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்? ஆண்களுக்கு இல்லையா?

Report Print Deepthi Deepthi in பெண்கள்

ஆதிகாலம் தொட்டே பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையரை இருக்கிறது.

புன்னகையை கூட மறைவாக மெதுவாக சிந்த வேண்டும், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு வேண்டும்.

தலையிலிருந்து கால் வரை அவளுக்கு உடலாலும், உள்ளத்தாலும் கட்டுப்பாடு கட்டாயம் உண்டு.

அத்தனை துறைகளில் தடம் பதிக்கும் பெண்களுக்கு எத்தனை எத்தனை தடைகள், இன்றளவும் பெண்ணடிமைத்தனம் நிறைந்த வீடுகள் உண்டு.

கல்விக்கு ஏங்கும் பெண் குழந்தைகள் உண்டு, கனவுகள் சிதைந்து போய் வீட்டில் அடுப்பூதும் பெண்களும் உண்டு.

தற்போது, இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வந்தாலும், இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு என வைக்கப்பட்டுள்ள பெயர்கள் மாறவில்லை.

இந்த சமுதாயம் பெண்களை பல்வேறு பெயர்களில் அழைக்கிறது.

திருமணம் தடைபட்டால் அதிர்ஷ்டம் இல்லாதவள் .

திருமணம் ஆகாமல் இருந்தால் முதிர் கன்னி.

கணவரை பிரிந்து வாழ்ந்தால் வாழாவெட்டி .

மகப்பேறு இல்லாத பெண் என்றால் மலடி என்கிறாய் .

கணவரை இழந்த பெண்ணை விதவை என்று அழைக்கிறது.

ஆனால் குறைகள் உள்ள ஆண் மகனுக்கு இந்த சமுதாயம் ஒருபெயரும் வைக்கவில்லையே.. ஏன்?

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments