வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான தீர்வு

Report Print Printha in பெண்கள்

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை போக்க இயற்கையில் சில அற்புதமான உணவு வகைகள் உள்ளது.

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
  • 1 ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி, அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் அதிக அளவிலான வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் குணமாகும்.
  • 1 ஸ்பூன் இஞ்சிப் பொடியை 2 டம்ளர் தண்ணீருடன் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • 10 கெய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் நன்கு கொதித்த பின் வடிகட்டி, அதை குளிர வைத்து அந்த தண்ணீரின் மூலம் பிறப்புறுப்பு பகுதியை நன்கு கழுவினால் வெள்ளைப்படுதலை தடுக்கலாம்.
  • தினமும் 1 டம்ளர் மாதுளம் பழத்தின் ஜூஸை குடித்து வந்தால், கருப்பையின் ஆரோக்கியம் மேம்படும். அதோடு 1 கைப்பிடியளவு மாதுளை இலைகளை அரைத்து, அதை 2 டம்ளர் தண்ணீரில் கலந்து வடிகட்டி, அதனுடன் மிளகுப்பொடியைச் சேர்த்து, ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • 4 வெண்டைக்காயை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அதை வடிகட்டி, குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments