பொதுவாக 35 வயதை அடைந்த அனைத்து பெண்களின் மனதில் இருப்பது தங்களின் தாம்பத்திய உணர்வு குறைந்து விடுமா என்ற சந்தேகம் தான்.
ஆனால் அது உண்மை இல்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்..
பெண்களுக்கு 30 வயதைத் தாண்டி விட்டாலே தாம்பத்திய உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற கருத்து பரவலாக இருப்பதற்கு, பெண்களின் உடல் மற்றும் மனம் ரீதியாக ஏற்படும் மாற்றம் தான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
35 வயதிற்கு மேல் பெண்களுக்கு அதிகப்படியான உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருந்தால் தான் தாம்பத்திய உறவில் உச்சநிலையை அடைவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
ஏனெனில் நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன்கள் சுரப்புகளில் சீரற்ற தன்மையில் இருப்பதால், தாம்பத்திய உணர்வில் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சில பெண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைவது இயல்பு. ஆனால் உண்மையில் 30வயதுக்கு மேல் தான் தாம்பத்திய வாழ்க்கையில் நிம்மதியாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
மருத்துவ ரீதியாக தாம்பத்திய உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளை மற்றும் மனதிற்கும் முக்கிய பங்கு உள்ளது.
எனவே 35 வயதினை அடைந்த பெண்கள் தங்களின் மனதை ரிலாஸ் அடையச் செய்து சரியான வழியில் உணர்வுகளை திசைதிருப்பினால் தாம்பத்திய உறவில் சிறப்பாக இருக்க முடியும் என்று என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.