அடையாளத்தை உலகுக்கு காட்ட மறுத்த ஒரு நடிகையின் கதை

Report Print Raju Raju in பெண்கள்

Merle Oberon ஒரு காலத்தில் திரையுலகில் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இந்தியாவில் பிறந்த இவர் கடைசி வரை தன் நிஜ அடையாளங்களை உலகிற்கு காட்டாமலே பூமியை விட்டு மறைந்து போனார்.

Merle Oberon கடந்த 1911ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் திகதி இந்தியாவின் மும்பை நகரில் பிறந்தார். இவரின் நிஜ பெயர் Estelle Merle O'Brien Thompson என்பதாகும்.

பின்னர் பிரித்தானியாவுக்கு 1928ல் Oberon இடம் பெயர்ந்தார். அங்கு அவரை கண்ட பிரபல இயக்குனர் Alexander Korda அவரை தான் இயக்கிய he Private Life of Henry VIII என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அப்போது தான் அவருக்கு Merle Oberon என்னும் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் தன்னை அறிமுகம் செய்த இயக்குனரையே Merle Oberon திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக அவர் உயர்ந்தார். பின்னர் தனது கணவரை விவாகரத்து செய்த அவர் பின்னாளில் மூன்று பேரை இடைவெளி விட்டு மணந்தார்.

Merleன் தனது மங்கலான தோற்றம் காரணமாக மேக்கப் இல்லாமல் மக்கள் முன்னர் தோன்றுவதை தவிர்த்து தன் நிஜ அடையாளத்தை மறைக்க தொடங்கினார்.

இந்திய வம்சாவளி நடிகை அதிக படங்களில் நடக்க தடை உத்தரவு அப்போது இருந்ததால் Merle, Tasmania நாட்டில் பிறந்தவர் என தன் பிறப்பு சம்மந்தமான அடையாளத்தையே அவர் மாற்றினார்.

1935ல் Merle, The Dark Angel என்னும் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

இந்தியாவில் பிறந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரே நடிகை இவர் தான்.

Merle கடைசியாக 1973ல் Interval என்னும் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் 1979 பக்கவாதம் நோய் ஏற்ப்பட்டு அவர் மரணமடைந்தார்.

என்ன தான் புகழ்ப்பெற்ற நடிகையாக Merle திகழ்ந்தாலும், கடைசி வரை தன் உண்மை அடையாளத்தை உலகுக்கு காட்டாமலே மரணித்து விட்டது பெரும் சோகம் தான்!.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments