இது பெண்களுக்கு மட்டும்: கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளுங்கள்

Report Print Printha in பெண்கள்

பருவம் அடைந்த பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஒருசில தரமற்ற நாப்கின்களை பயன்படுத்துவதால் உடலின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஏனெனில் சந்தையில் கிடைக்கும் நாப்கின்களை ஆய்வு செய்த போது, சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சைக் கொண்டு தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

இந்த மறுசுழற்சியில் பிளாஸ்டிக் வகை பொருட்களை பயன்படுத்துவதுடன் நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில், முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள், இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர், மூன்றாவது லேயர் பெட்ரோலிய பொருளாலும் தயாராக்கப்படுகிறது.

மேலும் அந்த நாப்கின்களின் ஒட்டும் தன்மைக் கொண்ட கீழ் லேயர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகையை வைத்து பாலித்தீன் மூலம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இது போன்ற தரமற்ற நாப்கின்களை பயன்படுத்துவதால், அதில் உள்ள டையிங் ரசாயனம், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருள் ஆகியவை புற்றுநோயிற்கான மூலக்காரணிகளை உருவாக்கி, பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் புற்றுநோய் இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது.

குறிப்பு

பெண்கள் மாதவிடாய் காலங்களில் தரமான நாப்கின் உபயோகிப்பதுடன் நான்கு மணிநேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments