பெண்களை சீண்டும் மிருகங்களுக்கு இதுதான் தண்டனை: நடிகை வரலட்சுமி பரபரப்பு பேட்டி

Report Print Printha in பெண்கள்

நடிகை வரலட்சுமி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடந்துக் கொள்ளும் ஆண்களுக்கு துாக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.

சென்னையில் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வரலட்சுமி, இந்தியாவிலேயே தமிழகம் தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம்.

ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகமாக பலப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு திரைத்துறையில் மட்டுமின்றி பிற துறைகளிலும், உடல் மற்றும் மனரீதியாக கொடுமைகள் அதிகரித்து வருகின்றது.

எனவே பெண்களுக்கு எதிராக உள்ள குற்ற வழக்குகளை விசாரிக்க, மாவட்டம் முழுவதும், மகளிர் நீதிமன்றங்களை உருவாக்கி, ஒரு வழக்கை ஆறு மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பு தர வேண்டும்.

வரும் மார்ச் 8 பெண்கள் தினத்தன்று சென்னை எழும்பூர் மைதானத்தில் சேவ் சக்தி என்ற பெயரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தவிருக்கிறேன்.

அதில் காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, அனைவரும் கையெழுத்து போடலாம். அதன் பின் நான் அதை மாநில அரசிடம் சமர்ப்பிப்பேன்.

மேலும் எதிர்காலத்தில், திரைத்துறையில் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க, தனி அமைப்பு துவங்குவது குறித்து நடத்தவிருக்கும் ஆலோசனையில் ஓய்வு பெற்ற நீதிபதிகளே இருக்க வேண்டும்.

இந்த ஆலோசனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்க வேண்டும்.

இதனால் எதிர்காலத்தில், சினிமாவிலும், பெண்களுக்கு எதிரான ஆபாச மற்றும் வன்முறை குறையும் என்று நம்பி இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு இந்த கோரிக்கையை சமர்பிக்கிறேன் என்று கூறுயுள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments