பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க இது தான் காரணமா?

Report Print Printha in பெண்கள்

பெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான் அவர்களின் உடல் மற்றும் மனம் வலிமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பெண்களின் உடல் பருமன் அதிகரிப்பதற்கு அவர்களின் உடம்பில் உள்ள தைராய்டு, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான், டெஸ்டோஸ்டீரான், இன்சுலின், கார்டிசால் போன்ற முக்கிய ஆறு ஹார்மோன்கள் சீரற்ற தன்மையே காரணமாகும்.

பெண்களின் உடல் எடை அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
  • பெண்களுக்கு மிக முக்கியமான ஒரு ஹார்மோன் தைராய்டு ஆகும். இந்த தைராய்டு சுரப்பிகள் குறைந்தால், அளவுக்கு அதிகமான உடல் பருமன், மனதளர்ச்சி, சோர்வு, மன அழுத்தம், வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்பது பாலின ஹார்மோன்களாக செயல்படுகிறது. எனவே இந்த ஹார்மோன் சுரக்கும் வரை பல ஆபத்தான நோய்களிலிருந்து பெண்களை பாதுகாக்கிறது. ஆனால் மாதவிடாய்க்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்துவிடுவதால், கலோரிகள் கொழுப்பாக மாறி உடல் பருமனை ஏற்படுத்துகிறது.
  • பெண்கள் உடம்பில் சுரக்கும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் மெனோபாஸ் ஏற்படும் போது குறைந்து விடுகிறது. ஆனால் இந்த ஹார்மோன்கள் குறைவதால், நமது உடலில் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் உடல் பருமன் உண்டாகிறது.
  • பெண்களின் கருப்பையில் நீர்கட்டி பாதிப்புகள் இருப்பதால், சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் உடல் பருமன் அதிகமாகிறது. இதற்கு முக்கிய காரணம் டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் நமது உடலில் அதிகரிப்பதே.
  • இன்சுலின் என்பது நமது உடம்பில் உள்ள கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் ஆகும். எனவே இன்சுலின் குறையும் போது குளுகோஸ் அளவு அதிகரித்து கொழுப்பாக மாறி, சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனை ஏற்படுத்துகிறது.
  • பெண்களின் உடம்பில் இருக்கும் கார்டிசால் அதிகரிப்பதால், நமக்கு அதிகமான பசி, தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த காரணமாக உள்ளது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments