திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது எதனால்?

Report Print Printha in பெண்கள்

பொதுவாகவே பெண்கள் தங்கள் அழகை பராமரிப்பதில் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் ஆசையாக இருக்கும்.

ஆனால் திருமணத்திற்கு முன்புவரை ஒல்லியாக இருந்தவர்கள், திருமணம் முடிந்ததும் குண்டாகி விடுகின்றனர்.

இதற்கு நம் வீடுகளில் சொல்லும் காரணம், திருமணம் நடந்த பூரிப்பில் குண்டாகிவிட்டனர் என்பதே. ஆனால் இதுகுறித்து அறிவியல் ரீதியாக ஆய்வொன்று நடத்தப்பட்டது.

ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 450 கிலோகிராமும், திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்கள் 6750 கிலோகிராமும், குழந்தை பெற்றுக் கொண்ட பெண்கள் 9000 கிலோகிராமும் உடல் எடை அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, திருமணத்திற்கு பிறகே பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது, குழந்தைகள் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களது எடை மேலும் அதிகரிக்கிறது.

இதற்கு உடல் உழைப்பு இல்லாததே காரணம், அதிக நேரம் தூங்குவதும் முக்கிய காரணமாக அமைகிறது.

உடல் எடை அதிகரிப்பது அவர்களுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும், எனவே துரித உணவுகளை தவிர்த்து முறையான உடற்பயிற்சியை செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments