புலி நடனம் ஆடிய பெண்கள்! வினோத நிகழ்ச்சி

Report Print Raju Raju in பெண்கள்

ஆண்கள் மட்டுமே ஆடும் புலி நடனத்தை எங்களாலும் ஆட முடியும் என கேரளத்தை சேர்ந்த பெண்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.

கேரளாவில் உள்ள திரிஷூர் மாவட்டத்தில் ஓணம் பண்டிகை சமயத்தில் புலிகாலி என்னும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.

200 ஆண்டுகளுக்கு முன்னர் கொச்சின் மகாராஜா ராம வர்ம தம்புரானால் இந்த கலை ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

புலி போல வேடம் அணிந்து வயிற்றில் புலி முகத்தை வரைந்து கொண்டு சாலையில் நடனமாடும் இந்த கலையில் பொதுவாக ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள், ஆனால் இந்த முறை அதிக அளவில் பெண்களும் பங்கேற்றார்கள்.

WINGS என்னும் அமைப்பை சேர்ந்த வினயா, திவ்யா, ஷகீனா ஆகிய மூன்று பெண்களும் இதில் பங்கேற்றார்கள்.

அதில் வினயா கூறுகையில், ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற இந்த கலையை பெண்களாலும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் இது நடக்கிறது, இதில் அதிக அளவில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இளவயது ஆட்கள் மட்டுமின்றி 72 வயது முதியவர்கள் கூட இதில் பங்கேற்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.

EPS (Albin Mathew)

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments