கனவுகன்னிகளாக வலம் வரும் பாட்டிகள்!

Report Print Raju Raju in பெண்கள்

பொதுவாக 55 வயதில் எல்லோரும் ஓய்வை நாடுவார்கள். ஆனால் அந்த வயதிலிருந்து நாம் சாதனையை தொடங்க கூட முடியும் என முதிய வயதுடைய பெண்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

ஜப்பானை சேர்ந்த டாக்கினோ என்ற பெண் தன் நண்பர்கள் 20 பேருடன் சேர்ந்து பாம் பாம் என்னும் சியர் லீடிங் நடன குழுவை நடத்தி வருகிறார்.

இதில் இடம் பெற்றுள்ள பெண்கள் எல்லாருமே 55 வயதை கடந்த முதியவர்கள் என்பது தான் ஆச்சிரியமான விடயமாகும்.

இது குறித்து அந்த குழுவின் தலைவர் டாக்கினோ கூறுகையில், என் இளமை பருவத்தில் சியர் லீடிங் பற்றி எனக்கு தெரியாது.

என் 53 வயதில் டெக்ஸாஸில் சென்று படிக்க விரும்பினேன். ஆனால் குடும்பத்தினர் தடை போட்டார்கள். ஆனால் என் குழந்தைகள் ஆதரவு எனக்கு இருந்தது.

பின்னர் வடக்கு டெக்ஸாஸ் பல்கலைகழத்தில் முதியோரியல் பட்ட படிப்பை முடித்தேன். என் கணவர் என் 60 வயதில் என்னை பிரிந்து சென்று விட்டார்.

பின்னர் இந்த நடன குழுவை ஆரம்பித்து 20 வருடங்களாக நடத்தி வருகிறேன் என கூறும் இவருக்கு தற்போது வயது 84.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments