குழந்தையை குளிக்க வைக்க போகிறீர்களா?

Report Print Fathima Fathima in பெண்கள்

பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது மிக கவனமாக கையாள வேண்டும்.

  • குழந்தைகளுக்கு பால் கொடுத்த உடனே குளிக்க வைக்கக்கூடாது, குளிப்பதற்கு சிறிது நேரம் முன்போ அல்லது குளிக்க வைத்த பிறகோ தான் பால் கொடுக்க வேண்டும்.
  • பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.
  • குளிக்க வைக்கும் போது குழந்தையை குலுக்க தேவையில்லை, காதில், மூக்கிலும் ஊதக்கூடாது.
  • தினமும் உடலில் எண்ணெய் தடவி குளிக்க வைக்கலாம்.
  • குழந்தையை தலைக்கு குளிக்க வைக்கும் போது, குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக விற்கப்படும் ஷாம்புவை பயன்படுத்தலாம்.
  • சிலர் கடலைமாவு, பயத்த மாவை பயன்படுத்துவதுண்டு, இது அவசியமில்லை.
  • தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.
  • குளிக்க வைத்த பிறகு மிக தூய்மையான டவலை கொண்டு துவட்ட வேண்டும்.
  • குளித்த பின்னர் உடனே சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். ஒருசில குழந்தைகளுக்கு இது அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.
  • குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின் ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments