நாங்களும் சாதனை படைப்போம்! நிரூபித்த பெண்கள்

Report Print Fathima Fathima in பெண்கள்

இந்தியாவில் இருசக்கரவாகனத்தின் மூலம் இமயமலையின் அதிக உயரத்தை கடந்து சாதனை படைத்துள்ளது 11 பேர்கொண்ட பெண்கள் குழு.

TVS நிறுவனத்தின்சார்பில் Himalayan Highs Season 2 என்ற சாகசப் பயணம் தொடங்கியது.

இதில் கலந்து கொள்ளஏராளமான பெண்கள் முயற்சித்தும், உடல் தகுதியின் அடிப்படையில், மேகா சக்ரவர்த்தி (பிலாஸ்பூர்), கபூர் மிஸ்ட்ரி (மும்பை), ரோஷினி சோம்குவார் (நாக்பூர்), கரீமா கபூர்(லக்னோ),எப்ரோனா டோரதி (சென்னை), பல்லவி ஃபவ்தர் (தில்லி), அன்தரா பால் (பெங்களூரு), திருப்தி சர்மல்கர் (மும்பை), சுர்பி திவாரி (பெஙளூரு), ஸ்ருதி நாயுடு (பெங்களூரு) போன்ற 10 பெண்கள் தெரிவாகினர்.

இவர்கள் அனம் ஹாசின் என்ற பெண் தலைமையில் 110 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரில்,கடந்த மாதம் 11ம் திகதிபயணத்தை தொடங்கினர்.

கரடுமுரடான சாலைகள்,கடும் குளிர், மோசமான வானிலை என எதையும் பொருட்படுத்தாது, கடந்த மாதம் 21ம் திகதிஇமயமலையின் Khardung La என்ற இடத்தை அடைந்தனர்.

கிட்டத்தட்ட 18,380 அடிகள் உயரத்தை இருசக்கர வாகனத்தில் கடந்து சாதனைபடைத்துள்ளனர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் அதிக உயரத்தைத் தொட்ட முதல் சாகசக் குழு என்ற பெருமையோடு India Book Of Records என்ற புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments