பெண்களே உஷார்!

Report Print Deepthi Deepthi in பெண்கள்
பெண்களே உஷார்!

பெண்கள் தங்களது நடைமுறைகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் மற்றவர்களிடம் பழகும் விதத்தால் உங்கள் மீது, அவர்களுக்கு மரியாதை ஏற்பட வேண்டுமே தவிர, அவமரியாதை ஏற்பட்டுவிடக்கூடாது.

குறிப்பாக நீங்கள் ஆண்களிடம் பழகுகிறீர்கள் என்றால் அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளுங்கள், ஏனெனில் அதனை அறிந்துகொள்ளாமல் பழகினால், நாளடைவில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.

உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விடயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.

எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் நடைமுறைகளில் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள முடியும்.

குறிப்பாக, அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களுடன் நட்புறவுடன் பழகினாலும், அதற்னெ ஒரு வரையறை வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் வரையறையை மீறும் கட்டத்தில், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.

அதுபோன்று, சாலைகளில் நடந்து செல்லும்போதும் பார்வைகளை அங்கும் இங்கும் அலைபாய விடக்கூடாது, இருப்பினும் கவனித்து செல்ல வேண்டிய சில விடயங்களை கவனித்து தான் செல்ல வேண்டும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments