வங்கக்கடலில் இன்று மாலை உருவாகிறது ஆம்பன் புயல்... மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

Report Print Kavitha in காலநிலை

இன்று மாலை தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த புயலுக்கு “ஆம்பன் புயல்” என பெயரிடப்பட்டுள்ளது. இது வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம்- வங்காளத் தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் புயல் காரணமாக 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்