யாழில் தொடரும் சீரற்ற காலநிலை: 9 ஆயிரம் பேர் பாதிப்பு

Report Print Sumi in காலநிலை

யாழ். மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்து 518 குடும்பங்களை சேர்ந்த 9ஆயிரத்து 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

தொடரும் மழையால் 4 வீடுகள் முழுமையாகவும்,159 வீடுகள் பகுதி அளவில் சேதமைடைந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் மழை தொடருமாக இருந்தால் தாழ் நிலப் பகுதி மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 106 குடும்பங்களை சேர்ந்த 385 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 40 குடும்பங்களை சேர்ந்த 137 பேரும், காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 27 பேரும், யாழ். பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களை சேர்ந்த 209 பேரும், நல்லூர் பிரதேச செயலாளர் 146 குடும்பங்களை சேர்ந்த 552 பேரும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 249 குடும்பங்களை சேர்ந்த 893 பேரும் பாதிப்பட்டுள்ளனர்.

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 273 குடும்பங்களை சேர்ந்த 1066 பேரும்,சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 393 குடும்பங்களைச் சேர்ந்த 1253 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 189 குடும்பங்களை சேர்ந்த 759 பேரும், பருத்தித்துறைப் பிரதேச செயலாளர் பிரிவில் 283 குடும்பங்களை சேர்ந்த 1045 பேரும், மருதங்கேணி பிதேச செயலாளர் பிரிவில் 643 குடும்பங்களைச் சேர்ந்த 2382 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...