தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை: இந்திய வானிலை மையம்

Report Print Fathima Fathima in காலநிலை

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பொழியும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 27ம் திகதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் பல இடங்களில் வெள்ளக்காடானது.

ஒரு வாரம் முழுவதும் மழை வெளுத்து வாங்கிய நிலையில், வெப்பச்சலனம் காரணமாக இன்னும் நான்கு நாட்களுக்கு மழை பொழியும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 11, 12ம் திகதி தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழையும், 13ம் திகதி தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வருகிற 13, 14ம் திகதிகளில் தமிழகத்தில் கனமழை இருக்கும் என நார்வே வானிலை மையமும் கணித்துள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்