புயலுடன் செல்ஃபி எடுக்க குவிந்த சென்னைவாசிகள்!

Report Print Nivetha in காலநிலை

அரசின் அறிவிப்பையும் மீறி பல சென்னைவாசிகள் மெரினாவில் குவிந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்தா என்ற கோரப் புயல் நேற்று பிற்பகலில் தாக்கக் கூடும் என கூறி, கடற்கரைப்பக்கம் செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருக்கவும் என பொதுமக்களை அரசு அறுவுறுத்தியிருந்தது.

அதே போல கடல் மிகுந்த கொந்தளிப்புடன் பலத்த காற்று, மழையுடன் புயல் கரையை கடந்தது.

மக்களின் பாதுகாப்பிற்காக கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என தெரிவித்து அங்கு பாதுகாப்பு பணியிலும் பொலிஸார் ஈடுபட்டனர்.

இருப்பினும் அரசின் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் விதமாக சில சென்னை வாசிகள் மெரினா கடற்கரைக்கு சென்று புயலுடன், கொந்தளிப்புள்ள கடலுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக கடற்கரை பக்கம் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது. கடலோரம் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டனர். இந்நிலையில் சென்னை மக்கள் சிலர் மெரினா கடற்கரைக்கு சென்று புயலால் கொந்தளித்த கடலுடன் செல்ஃபி எடுத்துள்ள விடயம் எல்லேரினது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments