வர்தா புயலில் பலியானவர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்வு

Report Print Sujitha Sri in காலநிலை

வர்தா புயலில் பலியானவர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

வர்தா புயலினால் நேற்று சென்னை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

மீட்பு பிரிவினரால் இன்று மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இதுவரையில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலின் படி, சென்னையில் நான்கு பேரும், காஞ்சிபுரத்தில் இருவரும், திருவள்ளூரில் இருவரும், விழுப்புரத்தில் ஒருவரும் மற்றும் நாகையில் ஒருவரும் என மொத்தமாக பத்து பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இதுவரையில் பத்தாயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments