சென்னையின் ரயில் சேவைகள் ரத்து!

Report Print Sujitha Sri in காலநிலை

சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் சில ரயில்களின் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புயலின் தாக்கத்தினால் பெய்த மழையினால் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளது.

இதனால் சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - பெங்களூர் டபுள் டக்கர், சென்னை சென்ட்ரல் - பிருந்தாவன், சென்னை சென்ட்ரல் - லக்னோ, சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் தண்டவாளத்தில் தேங்கியுள்ள நீர்வழிந்தோடும் வரையில் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சென்னை சென்ட்ரல் மைசூர் செல்லும் சதாப்தி விரைவு ரயில் பெங்களூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சிறப்பு ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்நது ரயில் சேவைக்கான நேரங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments