இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

Report Print Sujitha Sri in காலநிலை

புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வர்தா புயலினால் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வந்தது.

சென்னையில் 192 கிலோ மீட்டர் அளவில் காற்று வீசியதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்சார ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

இவற்றினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments