புயலை தொடர்ந்து தமிழகத்தை அச்சுறுத்தும் கன மழை

Report Print Sujitha Sri in காலநிலை

தமிழகத்தில் புயலின் தாக்கம் குறைந்த போதிலும் அநேகமான இடங்களில் தொடர் மழைக்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புயலானது கரையை கடந்த பின்பு திருவண்ணாமலை மாவட்டம் நோக்கி நகர்ந்துள்ளது.

வர்தா புயலானது கரையை கடந்த பின்பு வலுவிழந்ததால் காற்றின் வேகம் மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வரையில் காணப்பட்டது.

புயல் வலுவிழந்துள்ள போதிலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும்.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடை மழைக்கும் சில இடங்களில் கன மழைக்கான சாத்தியகூறும் காணப்படுகிறது. எனினும் படிப்படியாக மழையின் அளவு குறைந்து செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments