வர்தா புயலின் கோர தாண்டவம்! பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித நிவாரணம்

Report Print Sujitha Sri in காலநிலை

வர்தா புயலில் சிக்கியவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் சுகாதாரமான உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை பாய், போர்வை ஆகியவைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பல இடங்களிலும் மின் விநியோகம் விரைவில் சீராக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் வட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர சில தினங்களாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மின்வாரியம் மூலம் 4,000 களப் பணியாளர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல் காரணமாக ஏற்படக்கூடிய நோய் நிலைமைகளை கட்டுப்படுத்த 100 நடமாடும் மருத்துவ குழுக்கள், 50 தொற்று நோய் தடுப்பு குழுக்கள், 50 உணவு பாதுகாப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments