ஆக்ரோஷமாக தாக்கும் புயலிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.. ஸ்டாலின் வேண்டுகோள்

Report Print Nivetha in காலநிலை

வர்தா புயல் காரணமாக பலத்த காற்றும், மழையும் பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாலருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

வர்தா புயலின் காரணமாக நேற்று இரவிலிருந்தே சென்னையின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

அதி தீவிர புயலாக அறிவிக்கப்பட்டுள்ள ‘வர்தா’ புயல் இன்று பிற்பகலில் பழவேற்காடு அருகே கரையை கடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்தப் புயல் கரையை கடக்கும் பொழுது 120 கிமீ முதல் 129 கிமீ வரையில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் 1 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி வருகின்றன. இந்த நிலையில் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகின்றது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments