வர்தா புயலின் முற்றுகையில் சென்னை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Report Print Fathima Fathima in காலநிலை

பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணிக்குள் பழவேற்காடு கும்மிடிபூண்டி அருகே வர்தா புயல் கரையை கடப்பதால் பலத்த காற்றும், கன மழையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சென்னைக்கு கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது.

தற்போது 67 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடந்த பிறகு மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் என கூறியுள்ளார்.

மேலும் புயல் கரையை கடந்த பின்பு அதன் பின்னரான 12 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும், மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில்கள் இயங்க மாட்டாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments