வானிலை முன்னறிவிப்பு! வடக்கில் இன்று கடும் வெப்பமாக இருக்கும்

Report Print Murali Murali in காலநிலை

வடமாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வெப்பமான காலநிலையிலிருந்து பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்