வெப்பமான காலநிலை வெறிச்சோடிய முல்லைத்தீவு!

Report Print Mohan Mohan in காலநிலை

முல்லைத்தீவில் தொடரும் வெப்பமான காலநிலையால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் முல்லைத்தீவு நகர் பகுதியெங்கும் ஆள்நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றது.

இதன் காரணமாக வர்த்தக நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய நாட்களாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் வெப்ப அலைகளால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளது.

மேலும் அதிக வெப்பமான காலநிலை தொடர்வதினால் நீர் பற்றாக்குறையும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்