கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை மேலும் இரண்டு மாதங்கள் வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.
காற்றின் வேகம் குறைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு கடுமையான வெப்பநிலைமை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மே மாதம் பருவப் பெயர்ச்சி மழை பெய்யத் தொடங்கும் வரையில் வெப்பத்துடன் கூடிய காலநிலை இடைக்கிடை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவு பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய எதிர்வு கூறியுள்ளார்.