இலங்கையில் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிப்பு

Report Print Gokulan Gokulan in காலநிலை

இலங்கையில் இன்றும் நாளையும் காற்றுடன் கூடியதாக காலநிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்