அடுத்த 24 மணி நேரத்திற்கு யாழ். உள்ளிட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Report Print Steephen Steephen in காலநிலை

வங்காள விரிகுடாவின் தெற்கில் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அது மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும்.

நாட்டின் பல பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் 100 முதல் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றர் வரை கனமழைப் பெய்யக் கூடும்.

வடக்கு மாகாண மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை மாவட்டங்களில் இன்றும் நாளையும் 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலயவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் ஓரளவு பனியுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers