கடல் கொந்தளிப்பாக இருக்கும்! யாழ். மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Report Print Suthanthiran Suthanthiran in காலநிலை

இன்றைய காலநிலையை பொறுத்தவரை கடலோர பிரதேசங்களில் காற்றானது 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதால், கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும், மீனவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையை கவனத்தில் எடுத்து செயற்படுமாறும் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 915 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்தோடு நவம்பர் மாதம் வரை 611.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், நவம்பர் மாதம் முதல் இன்றுவரை 300.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

இது சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் குறைவான அளவாக உள்ளதாகவும், நவம்பர் மாதம் முடிவடைவதற்கு 10 நாட்களே இருக்கும் நிலையில் மழைவீழ்ச்சியின் அளவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று காலை 8.30 மணி தொடக்கம் இன்று காலை 8.30 மணிவரை வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 43.2 மில்லிமீற்றரும், அச்சுவேலிப்பகுதியில் 23.5 மீல்லிமீற்றரும், பருத்தித்தித்துறையில் 33.3 மில்லிமீற்றரும், நயினாதீவில் 21.3 மில்லிமீற்றரும், நெடுந்தீவில் 17.2 மில்லிமீற்றரும், யாழ்ப்பாணம் - கச்சேரி பகுதியில் 22.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்