மீண்டும் தாழமுக்கம்? நாளை முதல் இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம்!

Report Print Rusath in காலநிலை

இலங்கைக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது தற்போது மேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால் மழையுடனான காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

தாழமுக்கமானது எதிர்வரும் 9 ஆம் திகதி தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் அந்தமான் தீவிற்கு அண்மையில் உருவாகும் சாத்தியமுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணிவரையில் மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் 145.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 59.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 80.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளிப் பகுதியில் 187.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 342.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 61.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 288.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மேலும், உறுகாமம் பகுதியில 94.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 139.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 290.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கதிரவெளிப் பகுதியில் 153.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக கே.சூரியகுமாரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்த மழை பெய்து வருகின்றது.

இதனால் பல கிராமங்களிலுள்ள உள்வீதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளதோடு, உள்ளுர் போக்குவரத்துக்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இவற்றைவிட அண்மைக்காலமாக மழையின்றி காய்ந்து வரண்டுபோய் கிடந்த சிறிய குழங்கள் மழை நீரில் நிரம்பியுள்ளதுடன், வாய்க்கால்கள், குட்டைகள், ஏரிகளும், நிரம்பிக்காணப்படுகின்றன.

இதேவேளை, இவ்வாறான சூழலில் பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers