மட்டக்களப்பில் தொடரும் வெள்ளப் பெருக்கு! களத்தில் இறங்கிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Navoj in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக இதுவரை 499 குடும்பங்களைச் சேர்ந்த 1706 இடம்பெயர்ந்து 5 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்துள்ளார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஊரியன்கட்டு, கட்டுமுறிவு, அம்பந்தாவெளி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் நாசிவன் தீவு ஆகிய கிராமங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை வெள்ளம் காரணமாக கிரான் - புலிபாய்ந்தகல் தரைவழிப் பாதை துண்டிக்கபட்டுள்ளது.

கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1500 குடும்பங்களின் தரைவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்களின் போக்குவரத்திற்காக இயந்திரப் படகுச் சேவைகள் கிரான் பிரதேச செயலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிரான் தொடக்கம் புலிபாய்ந்தகல் பிரதேசம் வரைக்குமான சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம் இப்படகுச்சேவை நடைபெறுகிறது.

சித்தாண்டி ஈரளக்குளம் வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகத்தினால் இயந்திரப்ப படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கபபட்ட பிரதேசங்களுக்கு நேரடி விஜயம் செய்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் நிலமைகளை கேட்டறிந்ததுடன் அவசர உதவிகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers