நாளை முதல் வானிலையில் மாற்றம்! கொழும்பில் அடை மழை

Report Print Murali Murali in காலநிலை

நாட்டின் காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்றின் வேகமும் நாளையிலிருந்து குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers