இலங்கையின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் சாத்தியம்

Report Print Sujitha Sri in காலநிலை
77Shares
77Shares
lankasrimarket.com

இலங்கையின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பில் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வடமேல் மாகாணத்தில் சில இடங்களிலும் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, தென், மேல், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்