எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் சீரற்ற காலநிலை தொடரும்

Report Print Kamel Kamel in காலநிலை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் கடல் வரையில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சில பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers