மட்டக்களப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Report Print Kumar in காலநிலை
304Shares
304Shares
lankasrimarket.com

மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

கிரான் பிரதேசத்தில் நேற்று இரவு வரையில் 80.6 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், உன்னிச்சை பகுதியில் 44 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு நகரில் 26.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 36.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ் நிலங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்கும் நிலைமை காணப்படுகின்றது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்