காலநிலை தொடர்பில் விசேட எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in காலநிலை
763Shares
763Shares
lankasrimarket.com

இன்று தொடக்கம் அடுத்துவரும் சில நாட்களில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழ்கடல் பிரதேசங்களில் கடும் மழை பெய்ய கூடும்.

அந்த பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு தீவு கடல் பகுதிகள் காணப்படும் முகில் கட்டமைப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது காற்றின் வேகம் மணிக்கும் 70 - 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று இரவு முதல் இந்த காலநிலை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

காலை நேரங்களில் அம்பாறை. மட்டக்களப்பு மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய பாகங்களில் சீரான காலநிலை நிலவும். விடியல் நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்