மலையகத்தில் அதிக குளிருடன் அடைமழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Report Print Sujitha Sri in காலநிலை

இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக இன்று காலை முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் மலையகத்தில் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக நாட்டில் பல பகுதிகளிலும் பனியுடன் கூடிய குளிரான காலநிலை நிலவியதுடன், சில இடங்களில் துகள் மற்றும் உறை பனியை காணக்கூடியதாக இருந்தது.

இந்த பனி நிலைமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்பொழுது நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான காலநிலை ஆரம்பமாகியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அம்பலாங்கொடையில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரை நீடிக்கும் கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் தவிர்ந்த, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகளில் கொந்தளிப்பான நிலைமை காணப்படும்.

இங்கு காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் அதிகரிக்க கூடும். இது குறித்து மீனவர்களும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுபவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்