அமெரிக்காவில் உறைய வைக்கும் கடும் குளிர்; நிவாரண பணிகளுக்கு தீவிரம் காட்டும் பெண்!

Report Print Kavery in அமெரிக்கா

அமெரிக்காவில் உறைய வைக்கும் கடும் குளிர் காரணமாக, வீடு இல்லாதவர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறை எடுத்துக் கொடுத்து ஒரு பெண் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுகிறது.

குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவாக வெப்ப நிலை பதிவாகி வருகிறது.

இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வீடுகள் இல்லாமல் பொதுஇடங்களில் வசித்து வரும் மக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது.

கடும் குளிர்காற்றை தாங்கிக்கொண்டு பனித்துகள்களின் மீது படுத்து உறங்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சிகாகோ நகரில் வீடு இல்லாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கியதோடு, அவர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறையும் எடுத்துக்கொடுத்து ஒரு பெண் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

குறித்த, கேண்டிஸ் பெய்ன் என்கிற அந்த பெண் அங்குள்ள ஒரு ஓட்டலில் ஒரு அறைக்கு, ஒருநாள் 70 டாலர் வீதம் கட்டணமாக கொடுத்து 30 அறைகளை எடுத்து வீடு இல்லாதவர்களை தங்கவைத்துள்ளார்.

அவர் இந்த திட்டம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததும் அவருக்கு அனைத்து வகையிலும் உதவ தன்னார்வலர்கள் குவிந்தனர். அத்துடன் அவரது வங்கி கணக்கில் பணத்தையும் கொட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்