தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணிப்பெண்களுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Balamanuvelan in அமெரிக்கா
0Shares

மாடெர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கர்ப்பிணிப்பெண்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கர்ப்பிணிப்பெண்கள் மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன்பு, பைசர் தடுப்பூசி குறித்தும் இதேபோன்றதொரு எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மூன்று மில்லியன் கர்ப்பிணிப்பெண்கள் பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

இதுவரை உலகில் எந்த கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும், கர்ப்பிணிகள் மீது சோதனைகள் நடத்தி தனது தடுப்பூசி பாதுகாப்பானது என நிரூபிக்கவில்லை. 2021இன் முதல் மூன்று மாதங்கள் முடியும் வரை அப்படி ஒரு ஆய்வின் முடிவுகள் வெளியாக வாய்ப்பும் இல்லை.

ஆகவே, கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிப்பெண்களுக்கு பாதுகாப்பானது என உறுதியளிக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்கிறது, உலக சுகாதார அமைப்பு.

ஆனால், அமெரிக்க மருத்துவர்களோ, கர்ப்பிணிப்பெண்களுக்கு தடுப்பூசி போடுவதிலிருந்து விலக்களிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

கர்ப்பிணிப்பெண்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், தங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவேண்டுமா இல்லையா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்கிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்