அமெரிக்க ராணுவத்தில் கௌரவிக்கப்பட்ட தமிழர்

Report Print Fathima Fathima in அமெரிக்கா
451Shares

அமெரிக்க ராணுவத்தின் முதல் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் ராஜூ அய்யர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் கீழ அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்தவர் ராஜூ அய்யர்.

திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடியில் பிடெக் ( எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் )படித்த பின்னர் அமெரிக்க நாட்டில் எம்எஸ் மற்றும் பிஎச்டி படித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணியாற்றி தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.

இதை கவனித்த அமெரிக்க ராணுவம், ராஜூ அய்யரை முதல் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக நியமித்துள்ளது.

இந்த பதவி ராணுவத்தில் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல் பதவிக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்