அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் டிரம்ப்! முதுகெலும்பில்லாதவர்: நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் கடும் காட்டம்

Report Print Kavitha in அமெரிக்கா
265Shares

2020ம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதால் இவரது வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, நாடாளுமன்ற கட்டடத்தில் முகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் இந்த வன்முறையில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே நடைபெற்ற இந்த வன்முறை உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வன்முறைச் சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை ‘அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர்’ என விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுவதாவது, அதிபர் டிரம்ப், நியாயமான தேர்தல் முடிவுகளை தடுக்க முயன்றார். பொய்களால் மக்களை வழி நடத்த திட்டம் தீட்டினார். நாஜிக்கள் யூதர்களுக்கு எதிராக வெறியாட்டம் நடத்தினர்.

அதே போல் கடந்த 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் நாஜிகளுக்கு இணையான வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர்.

டிரம்ப் முதுகெலும்பற்றவர், தோல்வியடைந்த தலைவர், அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்