கமலா ஹாரீஸ் செய்தி தொடர்பாளராக இந்திய அமெரிக்கர் நியமனம்! குவியும் வாழ்த்துக்கள்

Report Print Santhan in அமெரிக்கா
227Shares

அமெரிக்க துணை அதிபராகவுள்ள, கமலா ஹாரிஸின் துணை செய்தித் தொடா்பாளா் பொறுப்புக்கு, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சபரீனா சிங் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கமலா ஹாரிஸின் துணை செய்தித் தொடா்பாளா் பொறுப்புக்கு, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சபரீனா சிங் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பைடன்-ஹாரிஸ் ஆட்சி மாற்றக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை அதிபா் பொறுப்பை கமலா ஹாரிஸ் ஏற்ற பிறகு, அவரது துணை செய்தித் தொடா்பாளராக சபரீனா சிங் பணியாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை அவா் பைடன்-ஹாரிஸ் தோ்தல் பிரசாரக் குழுவின் செய்தித் தொடா்பாளராகப் பொறுப்பு வகித்தார்.

முன்னதாக, மைக்கேல் புளூம்பா்கின் அதிபா் தோ்தல் பிரசாரக் குழு செய்தித் தொடா்பாளராகவும், கோரி புக்கரின் அதிபா் தோ்தல் பிரசாரக் குழு தேசிய செய்தித் தொடா்பாளராகவும் அவா் பொறுப்பு வகித்துள்ளார்.

அதற்கு முன்னா் குடியரசுக் கட்சி தேசியக் குழுவில், அவா் தகவல் தொடா்பு துணை இயக்குநராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்